‘ஆட்டோகிராப்’ சேரன் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம். இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றளவும் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் ‘ஆட்டோகிராப்’ படமும் ஒன்று.

தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ‘ஆட்டோகிராப்’ பெற்றது. தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சேரன் தற்போது படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து சேரன் தனது சமூக வலைதளத்தில், “ஆட்டோகிராப் படத்தை மீண்டும் கொண்டாட தயாராகுங்கள். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் ஆகிறது” என்று பதிவிட்டுள்ளார்.