‘தடையறத் தாக்க’ என்பது 2012-ம் ஆண்டு வெளியான படம், இது மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது. இதில் மம்தா மோகன்தாஸ், ராகுல் பிரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்தார்.

வாழ்க்கையில் முன்னேற போராடிய ஒரு இளைஞன், ஒரு உதவி செய்து ஒரு ரவுடி கும்பலால் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கதை இது. அவர்களிடமிருந்து அவன் தப்பிப்பானானா? இந்தப் பாராட்டப்பட்ட த்ரில்லர் படம் இப்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் பதிப்பில் மீண்டும் வெளியிடப்படுகிறது. அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை ஜூன் 27 அன்று வெளியிடுகிறது.