‘கண்ணப்பா’ திரைப்படம் விஷ்ணு மஞ்சு நடிப்பில் மோகன் பாபு தயாரித்த ஒரு புராணப் படம். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் இந்தியாவில் மிகப்பெரிய விளம்பரத்துடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. மேலும், ட்ரோல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழு எச்சரித்திருந்தது.
ஜூன் 27-ம் தேதி வெளியான இந்தப் படம் ஓடிடி-ல் வெளியிடப்படவில்லை. தற்போது இந்தப் படம் செப்டம்பர் 4 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தி திரைப்பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இந்தப் படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மது, கருணாஸ், பிரம்மஜி, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய் குமார் மற்றும் பலர் சிறப்புத் தோற்றங்களில் பங்கேற்றனர்.
பல்வேறு குருக்கள் மற்றும் எம்.பி.க்களுக்காக படக்குழு படத்தைத் திரையிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அவர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது.