கேரளத்தில் பிறந்த நடிகை ரேவதி, தன் தனிச்சிறப்பான நடிப்பினால் தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்றவர். 80 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமான ரேவதி, குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.
1988-ல், சுரேஷ் மேனன் என்பவருடன் திருமணம் செய்து கொண்ட ரேவதி, பின்னர் ஒரு குழந்தை பெற விரும்பி, 2002-ல் விவாகரத்து செய்தார். 47வது வயதில் டெஸ்ட் டியூப் மூலம் மகியை பெற்ற ரேவதி, தன்னுடைய உலகமே தான் பெற்ற மகள் தான் என தற்போது வாழ்ந்து வருகிறார்..
தற்போது, மகி 11 வயதாக இருக்கிறார். ரேவதி மகளைக் கேமரா முன் கொண்டுவராமல், தனிப்பட்ட முறையில் வளர்க்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரேகாவும், அம்பிகாவும் ரேவதியின் மகளுடன் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மகி மிகவும் அழகாக இருக்கிறார்… சுருட்டை முடியுடன் தங்க சிலை போல் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.