சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட வலைத் தொடரான ’குட் வைஃப்’ இன் தமிழ் பதிப்பு அதே பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த வலைத் தொடரை நடிகையும் இயக்குநருமான ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம், அவர் ஓடிடி-யிலும் இயக்குநராக அறிமுகமானார். ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் தொடரைப் பற்றிப் பேசிய ரேவதி, “இந்தக் கதையில் வரும் கதாநாயகியின் கதாபாத்திரம் வலிமையானது.

அவர் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் தொடர்பான பல சவால்களை எதிர்கொள்கிறார். இந்தத் தொடரை இயக்குவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். இந்தத் தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.