சென்னை: ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்திருந்தாலும், படக்குழு சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது படம் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மனதில் கொண்டு படக்குழு இதைத் திட்டமிட்டுள்ளது. ஜே.கே. சந்துரு இயக்கியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’வில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும், சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.