தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், சமுத்திரக்கனி, வினய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஹனு-மான்’.
பிரசாந்த் வர்மா இயக்கிய இப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாகம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற பெயரில் உருவாகி வருகிறது.
படத்திற்கு ‘ஜெய் ஹனுமான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னாவை ஹீரோவாக பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
‘காந்தாரா’ முதல் பாகத்தை ரிஷப் ஷெட்டி இயக்குகிறார்.