செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்டது, காந்தாரா இந்தியா முழுவதும் விமர்சன ரீதியான பாராட்டையும் கலவையான வசூலையும் பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டாலும் காந்தாரக் கதையின் முன்னுரையை படமாக்குகிறார்கள். படத்திற்கு காந்தாரா – அத்தியாயம் 1 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி பேசுகையில், “காந்தாரா இரண்டாம் பாகம். இது பல வருடங்களுக்கு முன் நடக்கும் கதை அடுத்த பாகத்தில் சொல்லப் போகிறது. தெய்வத்தின் பின்னணியை படம் சொல்லும்” என்றார். கூறியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக இலங்கை மற்றும் கர்நாடகா பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.