ரித்விகா ‘பரதேசி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘ஒரு நாள் கூத்து’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘லெவன்’ மற்றும் ‘டிஎன்ஏ’ படங்களிலும் நடித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், நேற்று திடீரென தனது திருமணம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியுடன் தனது நீண்டகால நண்பர் வினோத் லட்சுமணனை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தத்தை உறுதிப்படுத்தும் சில புகைப்படங்களையும், ‘கைத்தலம் பற்ற’ என்ற தலைப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
திருமணம் எப்போது, எங்கு நடைபெறும் என்று அவர் கூறவில்லை. திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? மற்ற நடிகைகளுக்கு டப்பிங் செய்வாரா என்பதையும் அவர் பதிவிடவில்லை.