சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மறைந்து 16 நாட்கள் கடந்துவிட்டன. அவரின் திடீர் மறைவால் சினிமா உலகம் மட்டுமல்ல, குடும்பத்தினரும் ரசிகர்களும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்நிலையில், அவரின் அண்ணன் மகளான இந்து சிவராமன், சித்தப்பா மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி ரோபோ ஷங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், சமீபத்திய சில புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், “என் வாழ்க்கையின் சிறந்த மனிதர் நீங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவருக்கும் அன்பு தந்தவர். இன்று நீங்கள் இல்லை என்றாலும், உங்கள் புகைப்படம் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது போல தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ரோபோ ஷங்கர் திரும்பி வர முடியாது, ஆனால் அவர் ஆசைப்பட்ட மாதிரி தைரியமாக வாழ வேண்டும்” என அவரை ஆறுதல் கூறியுள்ளனர். இதேவேளை, பலரும் இந்துவை ரோபோ ஷங்கரின் இரண்டாவது மகள் என நினைத்தனர், பின்னர் அவர் அண்ணன் மகள் என்பதும் தெரிந்தது.
மறுபக்கம், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, “ இறுதி ஊர்வலத்தில் தாயார் ப்ரியங்கா ஆடிய டான்ஸ் குறித்து, “அவர் அன்பை வெளிப்படுத்தும் வழி அது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார். தற்போது இந்திரஜா மற்றும் இந்து இருவரும் தங்கள் அன்பு நிறைந்த நினைவுகளை பகிர்ந்து வருவது ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.