சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. இதற்காக சூர்யா தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவிடம் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் குறித்தும், அவர் எப்போது தனி ஒருவன் படத்தில் நடிப்பார் என்பது குறித்தும் கேட்கப்பட்டது. ரோலக்ஸ் வேடத்தில் பாதி நாள் நடித்தேன். இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.
‘விக்ரம்’ படம் வெளியான பிறகு நானும் லோகேஷ் கனகராஜும் சந்தித்தோம். அப்போது ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை ஏன் தனிப் படமாக எடுக்கக் கூடாது என்று கேட்டார். அதன் பிறகு இரண்டு முறை சந்தித்தோம். அவரும் பிஸி, நானும் பிஸி. இரண்டும் சேரும் போது ‘ரோலக்ஸ்’ அல்லது ‘இரும்புக்கை மாயாவி’ போன்றவை நடக்கும்.
காலம்தான் பதில் சொல்லும்” என்று பதிலளித்தார் சூர்யா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் நடித்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.