கன்னட நடிகை ருக்மணி வசந்த், ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். பின்னர், தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் நடித்தார். அடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராசி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் நடிக்கும் அவர், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த பிரமாண்டமான ஆக்ஷன் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதால், அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ருக்மணி வசந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.