தளபதி விஜயின் அரசியல் பயணம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தால் பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் தமிழகமே துயரத்தில் மூழ்கியது. இதனால் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், பலரும் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயின் வெற்றிக்காக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வேண்டுதல் செய்து வருவதாக தகவல் பரவியுள்ளது. அவர் தனது இல்லத்தில் தினமும் அன்னதானம் செய்து, யாரும் வந்து உணவுபெறலாம் என ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் மகன் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்படுகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மகன் அரசியலில் உயர வேண்டும் என்பது பல வருடங்களாக இருந்த கனவு. சினிமாவில் விஜய் எப்படி முன்னணி நட்சத்திரமாக உள்ளாரோ, அதேபோல் அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம் என சொல்லப்படுகிறது. இந்த வேண்டுதலும் அதற்கான அடிப்படையில் நடைபெறுவதாக ரசிகர்கள் நம்புகின்றனர். எனினும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கரூர் விபத்து விஜயின் அரசியல் பயணத்திற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வேதனை அனைவரையும் உலுக்கியுள்ளது. இனிமேல் இத்தகைய துயர சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. மறுபக்கம், விஜயின் அடுத்த படம் ஜனநாயகன் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டு, வெளியீட்டிற்கான தயாரிப்பில் உள்ளது.