மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார்.
வரும் 31-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ‘பிரேமம்’ படத்தை முதலில் அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. பிரேமம் படத்துக்காக அல்போன்ஸ் புத்ரன் என்னிடம் பேசியபோது நம்பவில்லை. இது மோசடியான அழைப்பு என நினைத்து ஏற்கவில்லை. என்னுடைய பெயரை கூகுளில் தேடலாம் என அல்போன்ஸ் புத்திரன் கூறிய பிறகுதான் பேசினோம் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
அந்த படத்துக்கு முன்னாடி நான் ஒரு டான்ஸ் ஷோவ்வில் கலந்து கொண்டேன். அப்போதிருந்து அதற்கு ஏற்ற உடையைத்தான் அணிந்திருந்தேன். ஆனால் ‘பிரேமம்’ வெளியான நேரத்தில் அந்த வீடியோ வைரலாக பரவி எதிர்மறையான கருத்துக்களைப் பெற்றது.
அன்றிலிருந்து இனிமேல் அப்படி உடை அணிவதில்லை என்று முடிவு செய்தேன். என் உடலைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. இப்போது நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிகிறார்கள். அதனால் நான் அதே பாதையில் தொடர்வேன்.