சென்னை: நடிகை சாய் பல்லவி திடீரென காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். தமிழில் கடைசியாக ‘அமரன்’ படத்தில் நடித்தார் சாய் பல்லவி. படம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற சாய் பல்லவி, தனது பெற்றோருடன் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தார். சாய் பல்லவி சிவ பக்தி அதனால் தான் கோவிலுக்கு சென்றதாக சிலர் கூறுகின்றனர். அதே சமயம் அக்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால் அவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நிமித்திகர் சொன்னபடியே காசி கோயிலுக்குச் சென்று மங்களகரமான சடங்குகள் செய்ததாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, ‘கோவிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விஷயம். அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவிக்கப்பட்டது.