மும்பை: அமீர்கான் மகனுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான். ‘லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘லவ்யப்பா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிமுக இயக்குனர் சுனில் பான்டே இயக்குகிறார்.
இதற்கிடையே சாய் பல்லவி இவர் பான் இந்திய படமான ராமாயணம் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் கோலிவுட் என பிஸியாக வலம் வரும் சாய் பல்லவி குறித்து தொடர்ந்து புரளிகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் அவர் பலமுறை எச்சரிக்கையும் விடுத்துள்ளார். எனவே, இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.