சல்மான் கானின் இந்தி படம் ‘சிக்கந்தர்’, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், ஷர்மான் ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது:
கடந்த 47 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். சுமார் 258 படங்களில் நடித்துள்ளேன். நான் ஒரு போலி வில்லனாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்த நேரத்தில், இது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அப்போது எனக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது. 100 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளேன். தற்போது இதில் மீண்டும் வில்லனாக மாறியுள்ளேன்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு நன்றி. இதிலும் என்னை போலி நையாண்டி வில்லனாக மாற்றியவர் . இதில் சல்மான் கானுடன் நடித்துள்ளேன். அவரது தந்தை பிரபல திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானை சந்தித்தது இன்னும் சிறப்பு. சல்மான் கான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி, ‘அப்பா… இது கட்டப்பா’ என்றார். நான் கல்லூரியில் படிக்கும் போது சலீம்-ஜாவேத் பற்றி தெரிந்து கொண்டேன். தங்கள் கதைகள் மூலம் பலரை ஹீரோக்களாக மாற்றியதை நான் அறிவேன். இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.