மும்பை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில், சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படம் ரம்ஜானை முன்னிட்டு மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
விழாவில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, ஒரு நிருபர் “உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதே?” என கேட்டார்.
இதற்கு சல்மான் கான், “ராஷ்மிகாவிற்கும், அவரது தந்தைக்கும் பிரச்சனை இல்லை. அப்படியிருக்க, உனக்கு என்ன தம்பி பிரச்சனை?” என்று பதிலளித்தார். அவரது பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மேலும், “ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது, என் குழந்தை பருவ நினைவுகள் வரும். அந்தளவுக்கு அவர் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்” என்று அவர் ராஷ்மிகாவை பாராட்டினார்.
சல்மான் கானின் துணிச்சலான பதில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், “தம்பி, உனக்கு என்ன பிரச்சனை?” என்ற அவரது வரியை மீமாக உருவாக்கி வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
‘சிக்கந்தர்’ படம் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. சல்மான் – ராஷ்மிகா ஜோடி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.