மும்பை: நடிகர் சல்மான் கான் ராம ஜென்மபூமி கைக்கடிகாரம் ஒன்றை அணிந்துள்ளார். அதன் மதிப்பு ரூ.34 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் கலந்து வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும்போது சல்மான் கான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது.
ரூ.34 லட்சம் மதிப்பிலான எபிக் எக்ஸ் ராம் ஜென்மபூமி டைட்டானியம் 2 ரக கடிகாரத்தை அவர் கையில் அணிந்திருக்கிறார். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிகாரம் ராம ஜென்மபூமியின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் கடிகாரம், ராம ஜென்மபூமி மற்றும் இந்திய வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவத்துடன் தொடர்புடைய கூறுகளைக் காட்டும் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. கடிகாரத்தில் ராம ஜென்மபூமி கோயில் சிற்பத்துடன் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2டி டைட்டானியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதனை வடிவமைத்த எதோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சல்மான் கான் அணிந்திருக்கும் கடிகாரம் 44 மிமீ அளவு கொண்டதாகும். இக்கடிகாரத்தை கடந்த ஆண்டுதான் எதோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ராம ஜென்மபூமி டிசைனில் இரண்டு கடிகாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தியா கேட், கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ்மகால் மற்றும் குதுப்பினார் ஆகியவற்றை பிரிதிபலிக்கும் வகையில் கடிகாரங்களை எதோஸ் நிறுவனம் வெளியிட்டு கெளரவித்துள்ளது.
சல்மான் கானின் தந்தை சலீம் கான் முஸ்லிம் என்றாலும் அவரது தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது தாயார் சுசீலா திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சல்மா கான் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.