சமந்தாவின் வெப் சீரிஸ் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வரும் 7-ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில் சமந்தா சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். நிறைய கேள்விகள் வந்தன. ஒரு ரசிகர், ‘கொஞ்சம் வெயிட் போடுங்க’ என்றார்.
இந்தக் கேள்வியால் அதிருப்தி அடைந்த சமந்தா, “நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியும். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி நான் எனது உணவை எடுத்துக்கொள்கிறேன். கடுமையான அழற்சி எதிர்ப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதால் எனது எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு உள்ளது.
தயவு செய்து மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். இங்கே நாம் 2024-ல் இருக்கிறோம். வாழுங்கள், வாழ விடுங்கள் என்று கூறியுள்ளார்.