நடிகை சமந்தா தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். கடைசியாக அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom என்கிற புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சில புதிய திரைப்படங்களிலும் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். சமந்தா சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி உள்ளன. தமிழ்நாட்டில் பிறந்த இவர், கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானார்.

அந்த படத்தின் பின் மாஸ்கோவின் காவிரி மற்றும் பாணா காத்தாடி என்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். அந்த இரண்டு படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் ஹிட் ஆனதால், சமந்தாவுக்கு நல்ல பெயர் வந்தது. இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
VTV படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும்போது கௌதம் சமந்தாவை ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். சமந்தா நாக சைதன்யாவுடன் காதலித்து, 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்து விட்டனர். சமந்தாவுக்கு அரிய வகை நோய் மையோசிடிஸ் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது சமந்தா சிங்கிளாக உள்ளார்.
சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்கள் ட்ரெண்டாகி பரவி வருகின்றன. ரசிகர்கள் அவரது அழகை பாராட்டி கமெண்ட்ஸ் மற்றும் அதிகமாக ஷேர்கள் செய்து வருகிறார்கள். சமந்தா விரைவில் காதல் அல்லது திருமணசெய்ய இருப்பதாகவும் வதந்தி பரவுகிறது.