மும்பை: சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பனி’ தொடரின் அடுத்த சீசன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. ‘சிட்டாடல்’ என்பது ரிச்சர்ட் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியிடப்பட்ட வெப் சீரிஸ் ஆகும்.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தத் தொடரின் இந்தியப் பதிப்பு ‘சிட்டாடல்: ஹனி பனி’ என்று பெயரிடப்பட்டது. ‘தி ஃபேமிலி மேன்’, ‘பார்ஸி’ ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கினர். வருண் தவான், சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால், இந்தத் தொடர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த சீசன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தலைவர் வெர்னான் சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடித்த ‘சிட்டாடல்’ என்ற அசல் தொடர் மட்டுமே அடுத்த சீசனுக்கு தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். அதன் புதிய சீசன் 2026-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ‘சிட்டாடல்’ தொடரின் இத்தாலிய பதிப்பான ‘டயானா’வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அமேசான் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இந்த இரண்டு தொடர்களுக்கும் போதிய பார்வையாளர்கள் கிடைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.