சென்னை: ஜிபிஆர்கே சினிமாஸ் பேனரில் ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திரு.மாணிக்கம்’. நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். இயக்குநர்கள் விக்ரமன், லிங்குசாமி, சரண், அமீர், இ.வி. கணேஷ் பாபு வரும் 27-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அனன்யா, தம்பி ராமையா, சாம்ஸ், வடிவுக்கரசி, ரவிமரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சமுத்திரக்கனி பேசியதாவது:- முன்பு கெட்டவர்களுடன் பழகாதீர்கள். உங்களை வலையில் இழுத்து விட்டுவிடுவார்கள் என்று சொல்வார்கள். இப்போது நல்லவனைக் கண்டால் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வறுமையிலும் கடைசிவரை நேர்மையாக வாழ்ந்தவரின் கதையாக ‘திரு.மாணிக்கம்’ உருவாகியுள்ளது.
‘நாடோடிகள்’ படத்தில் நான் நடிக்கக் கண்டுபிடித்த அனன்யா இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அற்புதமாக நடித்திருக்கிறார். பாரதிராஜா, வடிவுக்கரசி, நாசர் என அனைவருமே தங்கள் நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி ஆகிய கேரளப் பகுதிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளது.