ஹைதராபாத்: புரி கனெக்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் இயக்குனர் புரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படத்தில் விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், சம்யுக்தா (மேனன்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. எனது கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ முதல் கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும். புரி ஜெகநாத் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.