சென்னை: ‘பார்க்கிங்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சிம்பு. இது அவருக்கு 49-வது படமாகும். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் சந்தானம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தனி ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்திய அவர், இதில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவருக்கு பெரும் தொகை வழங்கப்படுவதாகவும், இதற்கு முன் அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.