தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது இந்தி சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார். தனது இசையால் தனக்கென ஒரு பிரபல ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய அவர், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கபாலி, அட்டகத்தி, ஜிகர்தண்டா, வடசென்னை போன்ற படங்களில் அவரின் இசை மிகவும் பேசப்பட்டது. கபாலி படத்தில் அவர் அமைத்த பின்னணி இசை பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் வெற்றியைக் குவித்த சந்தோஷ், தெலுங்கில் கல்கி 2892 ஏடி படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தின் பின்னணி இசை சிறந்த வரவேற்பைப் பெற்றது. இப்போது, இந்தி சினிமாவில் சந்தோஷ் நாராயணன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சல்மான் கான் படமான சிக்கந்தர் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தின் பாடல்களுக்கு இசையை பிரிதம் அமைக்கிறார், ஆனால் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் உருவாக்குவார்.
இந்த படம் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், சுனில் ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. மும்பை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சிகள், மார்ச் அல்லது ஏப்ரல் 2025 மாதம் சிக்கந்தர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.