சைவம் மற்றும் தெய்வததிருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக முத்திரை பதித்த சாரா அர்ஜுன், தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் சிறு வயதில் நடித்துள்ளார். அண்மையில் அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நந்தினியாகவும் நடித்திருந்தார்.

இப்போது 20 வயதாகியுள்ள சாரா, ஹீரோயினாக மாறியுள்ளார். “Dhurandhar” என்ற ஹிந்தி படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த கூட்டணியில் ரன்வீருக்கு 40 வயதும், சாராவுக்கு 20 வயதும் என்பதால் வயது வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
தற்போது Dhurandhar படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே வைரலாகி உள்ளது. ரசிகர்கள் சாராவின் அழகு, நடிப்பு மற்றும் தனித்துவம் குறித்து புகழ்ந்து வருகின்றனர். அவரது பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சாரா தனது குழந்தை நட்சத்திர காலத்திலேயே திறமையை நிரூபித்தவர். இப்போது நாயகியாக வரும் அவருக்கு இந்த படம் பெரிய வெற்றியைத் தரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. “Dhurandhar” படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.