‘தி ஸ்மைல் மேன்’ சரத்குமாரின் 150-வது படம். ஷியாம்-பிரவீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேக்னம் மூவீஸின் கீழ் சலில் தாஸ் தயாரித்துள்ளார். ஆனந்த் கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ள இப்படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரத்குமார், “இந்தப் படம் 10 கோடி கோடி வசூல் செய்யும் என்று சொல்ல மாட்டேன். இது ஒரு க்ரைம் கதை. இந்த நாட்களில் க்ரைம் த்ரில்லர்களைப் பார்க்க அதிக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். அது பலிக்கும் என்று நம்புகிறோம். நிறைய போலீஸ் கதைகளில் நடித்துள்ளேன்.

இதில், நினைவுகளை மறக்கும் அதிகாரியாக நடித்துள்ளேன். அவரால் ஒரு வழக்கை சரியாக தீர்க்க முடியுமா இல்லையா என்பதே கதையாக இருக்கும்” என்றார். மேலும், “என் மனைவி ராதிகா ஒரு சிறந்த நடிகை. அவரது நடிப்பிற்காக தேசிய விருது பெறும் படத்தை இயக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உள்ளது. அது நிறைவேறும் என்று நினைக்கிறேன். அதற்கான பணியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.