சென்னை: தென்னிந்திய ஊடக உலகில் சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் வகையில், டிஎன்ஐடி-2025 தென்னிந்திய ஊடக விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 23 அன்று பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெறும்.
இந்த விழாவில் தென்னிந்திய செய்தி ஊடகங்களில் பணிபுரியும் திறமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விழாவை A.R குழுமம் நடத்தும், டிஎன்ஐடி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரகுபட் விழாவை தொகுத்து வழங்குவார். சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நடிகர்கள் சரவணன் மற்றும் நாகேந்திர பிரசாத் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரவணன், ‘நல்ல தரமான கதைக்களம் கொண்ட படங்களை எந்த விமர்சனத்தாலும் கெடுக்க முடியாது. படம் வெளியான 3 நாட்களுக்கு விமர்சிக்கக்கூடாது என்று விஷால் கூறியிருப்பது அவரது கருத்து.
ஆனால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு கண்டிப்பாக விமர்சனம் தேவை. அதுவும் வெளியான நாளிலிருந்தே தேவை. “அப்போதுதான் படம் வெளியாகிவிட்டது என்பதை மக்கள் அறிவார்கள்” என்று அவர் கூறினார்.