சென்னை: சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
மே 1-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசியதாவது:- எனக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்ட பலரும், ‘என்ன… சசிகுமாருக்கு ஜோடியா சிம்ரன்?’ நானெல்லாம் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க முடியாதா? படத்தில் எனக்கும் அவருக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளன.

அதை மறைத்துவிட்டார் இயக்குனர். சிம்ரனை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அவளை பிடிக்கும். என் மனைவியாக நடித்தாலும் கதாநாயகி. நான்தான் ஹீரோ. முதன் முதலாக ஈழத்தமிழ் பேசினேன். ஈழத்தில் இருந்து இந்தியா வந்த எனது குடும்பம் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை.