சென்னை: சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், ‘மெட்ராஸ் மேட்டினி’. மே மாதம் திரைக்கு வரவுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கிய இப்படத்தில் ரோஷ்னி ஹரிபிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியன், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து அறிவியல் புனைகதை எழுதும் மூத்த எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கிறார்.

ஆனந்த் ஜிகே ஒளிப்பதிவு செய்துள்ளார், கே.சி.பாலஸ்ரங்கன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.