நசீக்கைச் சேர்ந்த சையாமி கேர் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். 2015ல் வெளியான தெலுங்கு படம் “ரே” மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், பல மொழிகளில் தன் திறமையை நிரூபித்துள்ளார். சிறந்த நடிகையாக புகழ் பெற்ற அவர், ஒரு நேர்காணலில் அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

19 வயதில் இருந்தபோது ஒரு தெலுங்கு படம் தொடர்பாக பேசும் பெண் காஸ்டிங் ஏஜெண்ட், “நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது புரியும் அல்லவா?” என கேட்டதாக சையாமி கூறினார். ஆரம்பத்தில் அவர் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டது போல் நடித்து பார்த்து, பின் நேராக “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை” என கூறினேன். அதற்கு, “புரிந்து கொள்ளவேண்டும்” என பதிலளித்த அந்த பெண்ணிடம், “அந்த வகை வாய்ப்புகள் எனக்கு தேவையில்லை” என நிராகரித்துவிட்டதாக தெரிவித்தார்.
இது அவரின் வாழ்நாளில் ஒரே முறை ஏற்பட்ட காஸ்டிங் கவுச் சம்பவம் என்றும், அதுவும் ஒரு பெண் கேட்க நேரிட்டது தான் தன்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது என்றும் கூறினார். ரசிகர்கள் இதை கேட்டு, அந்த திரைப்படம் மற்றும் காஸ்டிங் ஏஜெண்ட் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வகையான சம்பவங்கள் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல திரையுலகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இது புதுமுக நடிகைகளிடம் மட்டுமல்ல, பிரபல நடிகைகளிடம் கூட நிகழ்ந்திருக்கிறது.
அதுதான் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஏற்கனவே அதுபோன்ற சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதேபோல் நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் அந்த வாய்ப்புகளை தைரியமாக மறுத்துள்ளனர்.
சையாமி கேர் பகிர்ந்த இந்த அனுபவம் திரையுலகில் தொடர்ந்து பேசப்படும் பிரச்சனையை மீண்டும் ஒளிக்குக் கொண்டு வந்துள்ளது. பெண்கள் குரலை உயர்த்தும் போது தான் இந்தப் பழக்கம் ஒழிய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள்.