நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் கடுமையாக உழைத்து வருகிறார் தனுஷ். அவரது வளர்ச்சி குறித்து இயக்குனர் செல்வராகவன் கூறும்போது, “தனுஷின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. அதையும் தாண்டி நான் ஒரு தாயாக உணர்கிறேன். தனுஷை நினைத்து பெருமைப்படுகிறேன்.
தனுஷ் பற்றி பலரும் இப்படி கூறியுள்ளனர். ‘ராயன்’ படப்பிடிப்பின் போது பார்த்தேன். வேலை கொடூரமானது என்று நான் கூறுவேன். அப்போது அவர் தூங்கவே இல்லை. ஷூட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பி விடுவோம். இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு காலையில் வந்து விடுவார். ‘இப்படி உழைக்க கடவுள் அருள் வேண்டும்’ என்று அவரிடம் சொன்னேன்.
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இவர்கள் இணைந்து நடித்த ஆரம்ப கால படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன. தனுஷும், செல்வராகவனும் கடைசியாக இணைந்து நடித்த படம் ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்தார்கள்.