அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 98-வது ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் சார்பாக ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நீரஜ் கெவன் இயக்கிய இதில் இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியிடப்பட்டது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற இந்த படம், தி நியூயார்க் டைம்ஸில் பஷரத் பீர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.

படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு சென்சார் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர், ஒரு மதிப்பாய்வு வாரியம் படத்தைப் பார்த்து பல்வேறு மாற்றங்களைச் செய்யச் சொன்னது. 11 வெட்டுக்களைக் கொடுத்த பிறகு, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.