சென்னை : சீரியல் நடிகை கண்மணியின் சீமந்தம் படு கோலாகலமாக நடந்துள்ளது,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் நடிகை கண்மணி.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் கண்மணி பாதியிலேயே வெளியேறி இருந்தார். பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், ஆனால் இந்த தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன்பின் மகாநதி தொடரில் நடிக்க தொடங்கியவர் பின் அதில் இருந்தும் விலகினார். பிறகு சன் டிவியின் பிரபல தொகுப்பாளரான அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார்கள்.
இந்த நிலையில் கண்மணியின் சீமந்தம் படு கோலாகலமாக நடந்துள்ளது,