மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நீதிபதி ஹேமா தலைமையிலான குழு 233 பக்க அறிக்கையை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
பொதுவாக திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், ஒடுக்குமுறை மற்றும் உழைப்புச் சுரண்டல் பற்றிய முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளன. இதனிடையே மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கூறுகையில், “இந்த ஆய்வறிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது மிகப்பெரிய கொடுமை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆனால், பொதுவாக மலையாள திரையுலகில் மட்டும் சிலர் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன என்று காட்டுகின்றனர். ஆனால் அனைத்து திரைப்படத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, அதற்கு முறையான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்று டோவினோ தாமஸ் கூறினார்.