கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் ஷாருக்கான். கடந்த சில வருடங்கள் மோசமான ஆண்டுகள். அவரது படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைதானது அவரை மனதளவில் பாதித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹிட் டிராக்கில் வந்துள்ளார். தொடர்ந்து, 2023ல் இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்று 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தன. இதற்கிடையில் ராஜ்குமார் ஹிரானியின் டன்கியும் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்நிலையில், தற்போது பாரிஸில் உள்ள கிராவின் மியூசியம் ஷாருக்கானை பெருமைப்படுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.