நடிகர் ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து, ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்திற்கு இந்தியில் டப்பிங் செய்திருக்கிறார்.
ஷாருக்கான், ‘தி லயன் கிங்’ படத்தின் தொடர்ச்சியான அடுத்த அத்தியாயமான ‘முஃபாசா: தி லயன் கிங்’ 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘தி லயன் கிங்’ ஆன்மீக அனிமேஷன் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிபெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படம், முஃபாசா மற்றும் ஸ்காரின் கதையை மையமாகக் கொண்டு காட்சிகளால் நிரம்பியுள்ளது.
ஷாருக்கான், “இந்த கதையில் முஃபாசா என்னோடு ஆழமாக தொடர்பு கொள்ள முடிகிறது. டிஸ்னியுடன் இணைவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. என் மகன்களான ஆர்யன் மற்றும் ஆப்ராம் ஆகியோரும் இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்திருப்பது, எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.