தனுஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தனுஷ், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். ஆகாஷ் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஷாலினி பாண்டே நடித்ததை பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் ஷாலினி பாண்டே தமிழில் ‘100% காதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதையடுத்து ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்கும்போது பிரச்னை ஏற்பட்டது. அப்போது இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அதனால் சர்ச்சையான ‘அக்னி சிறகுகள்’ படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
இறுதியாக, ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு, அக்ஷரா ஹாசன் அவரது கேரக்டரில் நடித்தார். படம் இன்னும் வெளியாகவில்லை. ஷாலினி பாண்டே தற்போது தனுஷ் இயக்கும் படத்தில் நடித்து மீண்டும் தமிழில் வந்துள்ளார்.
ஹிந்தியில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத் தரவில்லை. இதனால் அவர் தமிழுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.