மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக மோகன்லால் இருந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று கொச்சியில் நடைபெற்றது.
தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 முக்கிய பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது. இதில், ஸ்வேதா மேனன் மற்றும் நடிகர் தேவன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன், பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா மற்றும் ஜெயன்சேர்தலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச் செயலாளராக அன்சிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆகஸ்ட் மலையாள நடிகர் சங்க வரலாற்றில் ஒரு பெண் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை, எனவே அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.