தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சித்தார்த், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை அதிதி ராவ் காதலித்து வந்தார். இன்று எளிமையாக கோவிலில் நடந்து முடிந்தது திருமணம். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் மணிரத்னத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய சித்தார்த், ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நான்கு வருடங்கள் பல படங்களில் நடித்து, தெலுங்கில் சிறப்பாக பெயர் பெற்றார்.
முதல் திருமணத்தில் மேக்னா உடன், 4 வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அடுத்ததாக, சமந்தாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அதிதி ராவோடு காதலாகி, அதிதி ராவுடன் தங்கள் திருமணத்தை எளிமையாக முடித்தனர்.
அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடியின் காதல், மகாசமுத்திரம் படத்தில் தொடங்கியது. அவர்களின் காதலை மீடியா வெளியிட்ட போது, இவர்கள் ஒரே வீட்டில் குடியேறி, மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர்.
இவர்களின் திருமணம் 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் நடைபெற்றது. சித்தார்த் பட்டு வேஷ்டி, அதிதி சந்தன நிற சேலையில் எளிமையாக இருந்தனர். சமீபத்தில், திருமண புகைப்படங்களை அதிதி வெளியிட்டார். இவர்களை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.