மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்பிரிட்’. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ ஹிந்திப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிப்பார் என்ற பேச்சு எழுந்தது.
ராஷ்மிகா மந்தனாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வந்தனர். ஆனால், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சிக்கந்தர்’ படம் தோல்வியடைந்ததால், இந்தப் படத்தில் வேறு கதாநாயகியைத் தேர்வு செய்யுமாறு இயக்குநர் தரப்பில் தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.4 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளனர். ஆனால் தற்போது வேறு ஹீரோயினை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.