நடிகர் சிலம்பரசன் தனது 42-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
இதனை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அந்த அறிவிப்பில் ‘மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ என்பது டேக் லைன். இதில் சிம்பு கல்லூரியில் நடக்கும் கதையில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். இதைத் தொடர்ந்து அவரது 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதனை ‘ஆட்மன் சினி ஆர்ட்ஸ்’ சார்பில் நடிகர் சிம்புவே தயாரிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவின் 51-வது படமான இது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.