‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு, சிம்பு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ‘தக் லைஃப்’ படத்தின் மிகப்பெரிய தோல்வியால் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, வெற்றிமாறன் – சிம்பு இணையவுள்ளனர்.

வெற்றிமாறன் – சிம்பு இது தொடர்பாக மூன்று முறை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி பணிகள் தொடங்கும். படப்பிடிப்பு முழுவதுமாக வட சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் நடைபெறும். படத்தை தாணு தயாரிப்பார்.
சிம்பு படத்தை முடித்த பின்னரே வெற்றிமாறன் ‘வட சென்னை’ படத்தின் பணிகளைத் தொடங்குவார். சிம்பு நடிக்கும் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.