தேவயானி மகாராஷ்டிராவின் மும்பையில் கொங்கனி தந்தை மற்றும் ஒரு மலையாளி தாய்க்கு பிறந்தார். நடிகை தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ். அவருக்கு நகுல் மற்றும் மயூர் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். மலையாளத்தில் கின்னரிபுயோரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தேவயானி.
இதைத் தொடர்ந்து தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆனார். ஆனால், காதல் கோட்டை படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தேவயானி நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, 90களின் இறுதியில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். குறுகிய காலத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆனது. இதற்கிடையில் சூரியவம்சம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரனை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், தேவயானியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சினிமா பாணியில் ராஜகுமாரை திருமணம் செய்து கொண்டார் தேவயானி.
பல பிரச்சனைகளுக்கு பிறகு தேவயானி – ராஜகுமாரன் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்தது. அப்போது பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து சாட்சி கையெழுத்திட்டார். மேலும் ராஜகுமாரை விக்ரமனிடம் உதவி இயக்குநராக சேர்த்தவர் சிங்க முத்து என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவயானி-ராஜகுமாரன் தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த தேவயானி, சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கோலமங்கள், முத்தாரம், ராசாத்தி போன்ற பிரபலமான வெற்றித் தொடர்களில் நடித்த இவர், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். தேவயானி தற்போது ஜெயம் ரவியின் ஜெனி படத்தில் நடித்து வருகிறார்.