நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. அவர் தற்போது சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். விஜய்யின் ‘தி கோட்’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது. ‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் காலப் பயணம் பற்றிய அறிவியல் புனைகதை கதை. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கயாது லோஹர் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கல்யாணி ஏற்கனவே வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படங்களில் நடித்துள்ளார். ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர், சிம்புவின் 49-வது படமான ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.