சென்னை: ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:- என்னை போன்ற சாதாரண மனிதர்கள் இந்த துறைக்கு வருவதை ஒரு சிலர் மட்டுமே வரவேற்கிறார்கள். சில குழுக்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை. இந்தத் தொழிலுக்கு வர அவர் யார் என்று கேட்டார்கள். சிலர் என் முகத்துக்கு நேராக, ‘இந்தத் தொழிலில் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டாலும் நான் அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை.
நான் சிரித்துக்கொண்டே செல்கிறேன். எனது வெற்றியின் மூலம் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. என்னுடைய வெற்றி அவர்களுக்கானது அல்ல. என்னுடன் 100 சதவீதம் முயற்சி செய்த எனது அணிக்கு எனது வெற்றி. வெற்றியோ தோல்வியோ என்னைக் கொண்டாடும் என் ரசிகர்களுக்குத்தான். “உன்னைப் போல நாங்களும் வரணும் தம்பி” என்று சொல்பவர்களுக்குத்தான். என் படம் தோல்வியடைந்தால் அதற்கு நான் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் சிலர் என்னைத் தாக்குவார்கள், ஆனால் படம் வெற்றி பெற்றால் என்னைத் தவிர மற்ற அனைவரையும் பாராட்டுவார்கள்” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.