சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், தன்னுடைய 25வது படத்திற்கான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், SK25வது படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்திற்கு அது தலைப்பு இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.