சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனின் 25-வது படம். இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ராணா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 1960-களில் நடக்கும் இந்தப் படம், கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் கதை. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தப் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14, 2026 அன்று வெளியாகும்.
விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படமும் பொங்கல் அன்று வெளியாகும்.