சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கதையில் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் தனது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டார்.
‘இடி மின்னல் காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி மாதவன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவருடன் நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரைப்படத் துறைகளைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
புலனாய்வு ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தை, தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா – கிருஷ்ணகுமார். பி. சாகர் ஷா ஆகியோர் இணைந்து ஸ்ரீதிக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கின்றனர்.